பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா?

ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டத் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அதில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா அடுத்த மாதம் (ஜூன்) 24-ந் தேதி நடைபெற வேண்டும்.

தேரோட்டத்தில் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்திரை ஆகியோர் பவனி வருவதற்கான தேர்கள் செய்யும் பணி வழக்கமாக அட்சயதிரிதியை நாளில் தொடங்கும். கொரோனா பீதி காரணமாக இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.


தற்போது சுவாமிகள் பவனி வருவதற்கான தேர்களை செய்வற்கு கோவில் நிர்வாகக்குழு திடீர் என்று சிபாரிசு செய்து இருக்கிறது. இருந்தாலும் குறித்த தேதியில் திருவிழா நடைபெறும் என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + eleven =