பூச்சோங் பிரிமா அடுக்குமாடிக் குடியிருப்பில் இளைஞர்களின் அட்டகாசம்

பூச்சோங் பிரிமா பங்சாபுரி அமான் 9 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்திய இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது என்று பூச்சோங் பிரிமா அடுக்குமாடிக் குடியிருப்பின் உதவித் தலைவர் சுரேஷ் தெரிவித்தார். இங்கு சுமார் 240 வீடுகள் இருக்கின்றன. அதில் 350 குடும்பங்கள் வாழ்கின்றன. மலாய், சீனர், இந்தியர் என மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இங்கே நம் இந்திய இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மருந்தி அருந்திக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். இந்த மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில் யாரும் அமரக் கூடாது என்று சுரேஷ் கூறினார். 10லிருந்து 15 பேர் கொண்ட இக்கும்பல் மேசையை அங்கு வைத்து மது அருந்திக் கொண்டிருக்கின்றனர். இந்த இடத்திற்குப் பக்கத்தில் சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு சிறுவர்கள் வரும்போது இவர்கள் மது அருந்தி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெற்றோரும் இவர்களிடம் எதுவும் பேச முடியாமல் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த கும்பலின் நடவடிக்கையை மூவின மக்களும் என்னிடம் புகார் செய்துள்ளனர் என்று சுரேஷ் தெரிவித்தார். கடந்த காலங்களில் டத்தோஸ்ரீ தெய்வீகன் சிலாங்கூர் மாநில காவல்துறை துணைத் தலைவராக இருந்த போது பங்சாபுரி அமானுக்கு வருகை புரிந்து இங்குள்ள குண்டர் கும்பல், அட்டகாசம், திருட்டு போன்ற சம்பவங்களை முறியடித்துள்ளார் என்று சுரேஷ் தெரிவித்தார். ஆனால் இப்போது போலீஸா ருக்கு தகவல் தெரிவித்தால் போலீஸார் அந்த இடத்திற்கு வருவதற்கு முன் இவர்கள் காணாமல் போய்விடுகின்றனர். பங்சாபுரி அமானை சுத்தம் செய்யும் திருமதி தேவி கூறுகையில், எனது மகனை இங்குள்ள இளைஞர்கள் மிரட்டி அடித்துள்ளனர். இது சம்பந்தமாக போலீஸ் புகார் செய்துள்ளேன். இதனால் என் மகனை வீட்டில் தங்க வைக்காமல் உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார். இங்குள்ள பிரச்சினைகளுக்கு போலீஸார் கண்டிப்பாக தீர்வு காண்பார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக சுரேஷ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =