பூச்சோங்கில் 500 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு

0

வசதி குறைந்த மக்களும் ஆண்டுக்கொரு முறை வரும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ வேண்டும் என்ற
வகையில் பூச்சோங் சுற்றுவட் டாரத்தில் உள்ள மூன்று அரசு சாரா இயக்கங்கள் ஒன்றிணைந்து தீபாவளி நிகழ்வை சிறப்பாக நடத்தின.
இங்குள்ள பூச்சோங் உத்தாமா மண்டபத்தில் நடைபெற்ற இந்த அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை சிலாங்கூர் சமுத்திர இயக்கம், மக்கள் சமூகநல இயக்கம், நம் இனம் இயக்கம் ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தியதாக சமுத்திர இயகத்தின் தலைவர் ஜெயசீலன் ஜீவா தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக இந்த அன்பளிப்பு நிகழ்வை நாங்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம். இந்த நிகழ்வில் வசதி குறைந்த 500 பேருக்கு பரிசுக் கூடைகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாக முதன் முறையாக பூச்சோங் வட்டாரத்தில் உள்ள சிறுதொழில் வர்த்தகர்களைக் கருத்தில் கொண்டு தீபாவளி கார்னிவெலும் இடம்பெற்றது. இந்த விற்பனைச் சந்தையில் 25 சிறுதொழில் வர்த்தகர்கள் கடைபோட்டனர்.
அடுத்தாண்டு இன்னும் அதிகமானோருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்வில் மற்றொரு சிறப்பு அங்கமாக ’மை குருக்கள் செயலி அறிமுகம் கண்டது. மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலை
வர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷாண் இந்த செயலியை அதிகாரப் பூர்வமாக அறிமுகம் செய்தார்.
இந்த செயலியின் மூலம் இந்துக்களின் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விதமான விசேஷ காரியங்கள் மட்டுமின்றி துக்க காரியங்களுக்குத் தேவை யான சாங்கிய சம்பிரதாயங்களைச் செய்யும் குருக்களை தெரிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து விவரங்களும் அந்த செயலியில் அடங்கியுள்ளதாக ஜெய
சீலன் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு தகவல், தொடர்பு பல்லூடக அமைச்
சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார். சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து ஆதரவு நல்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =