புவனேஷ் ரமேஷும் ஸ்ரீ அபிராமியும் தங்கப்பதக்க விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்

நேற்று செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஓம்ஸ் அறவாரியத்தின் தங்கப் பதக்க விழாவில் புவனேஷ் ரமேஷும், ஸ்ரீ அபிராமியும் பிரத்தியேகமான முறையில் பிரமுகர்களால் சிறப்பிக்கப்பட்டனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம். தேர்வில் 4.00ஜிபிஏ பெற்று தேசிய அளவில் மிகச் சிறந்த 10 மாணவர்களுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிடமிருந்து சிறப்பு விருதினை பெற்றார் புவனேஷ் ரமேஷ்.
கடந்த 2006ஆம் ஆண்டு காஜாங் தமிழ்ப்பள்ளியில் தம்முடைய ஆரம்பக்கல்வியை முடித்த இவர் யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். பின்னர் காஜாங் கான்வென்ட் இடைநிலைப்பள்ளியில் பி.எம்.ஆர். தேர்விலும், எஸ்.பி.எம் தேர்விலும் சிறப்புத் தேர்ச்சி பெற்று எஸ்.டி.பி.எம். பயிலத் தகுதி பெற்றார். தற்போது மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பிரிவில் முதலாம் ஆண்டு மாணவியாக கல்வி பயின்று வரும் புவனேஷ் ரமேஷின் திறமை மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு மேடையில் சிறப்பிக்கப்பட்டது.
வரும் 2026ஆம் ஆண்டு மிலான் குளிர்கால ஒலிம்பிக் பனிச்சருக்கு போட்டியில் தங்கப் பதக்கம் கொள்வதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிறுமி ஸ்ரீஅபிராமி ஆசிய பனிச்சருக்கு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இளம் வீராங்கனை மட்டுமின்றி மலேசிய சாதனையாளர் புத்தகத்திலும் இவர் இடம் பிடித்துள்ளார். அனைத்துலக பனிச்சறுக்கு போட்டிகளில் அதிகமான பதக்கங்கள் வென்ற இளம் வீராங்கனை என்ற அடிப்படையில் அவர் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெற்றார். அதே போன்று ஆசிய சாதனையாளர் புத்தகத்திலும் இவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =