புல்வெட்டும் தொழிலுக்கு பெர்மிட் கிடைக்கவில்லை

0

புல் வெட்டும் தொழில் முதலில் தோட்டத் தொழில்துறையாக இருந்தது. பிறகு துப்புரவுத் தொழில்துறையாக மாற்றப்பட்டது. அதன் பிறகு கட்டுமானத் துறையுடன் இணைக்கப்பட்டது.அதனால் நாங்கள் சார்ந்திருக்கும் புல் வெட்டும் தொழில் என்ன துறை என்றே தெரியவில்லை. இதில் அந்நியத் தொழிலாளர்கள் இருந்தால் நீங்கள் வேறு துறைக்கு பெர்மிட் எடுத்து விட்டு புல் வெட்டுகிறீர்கள் என்று அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று மலேசிய தோட்டத் தொழில் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆனந்த் கூறினார்.

உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆனந்த் கூறினார்.இவ்விவகாரம் தொடர்பில்
மனிதவள அமைச்சர் குலசேகரனைச் சந்தித்து முன்னதாக மனு வழங்கியிருந் தோம். அந்த அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகளிடம் முழு விளக்கத்தையும் கொடுத்திருந்தோம். ஆனால் அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டு வரும் நடவடிக்கையை அரசாங்கம் முடக்கி விட்டது. இதனால் தொழிலாளர்கள் இல்லாமல் தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழ்நிலையில் புல்வெட்டும் தொழில் எந்தத் துறையைச் சேர்ந்தது என்று மனிதவள அமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்றும் டத்தோ ஆனந்த் வலியுறுத்தினார்.தற்போது சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் சொந்தமாகவே தோட்டத் தொழில்களைச் செய்வதால் எங்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here