புனித லூர்து மாதா தேவாலாயத்திற்கு 1 லட்சம் வெள்ளி நிதி உதவி

சிலிபின் வட்டாரத்திற்குச் செல்லும் சாலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் அமைந்திருக்கும் புனித லூர்து மாதா தேவாலயத்தின் மேம்பாட்டு பணிக்கு புந்தோங் சட்டமன்ற உறுப்பினர், ஆதி.சிவசுப்ரமணியம் 1 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார்.
ஈப்போ வட்டாரத்தில் பழைமை வாய்ந்த தேவாலயமான புனித லூர்து தேவாலயம் மேம்பாடு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில் அந்நிதி வழங்கப்பட்டுள்ளது என சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
தேவாலயத்தின் கூரை பகுதியில் ஏற்பட்டிருக்கும் சில சேதங்களை சரி செய்ய நிதி தேவைப்படுகிறது. கூரை மட்டுமின்றி பழைமை வாய்ந்த இந்த தேவாலயம் பழுது பார்க்கப்படவே இந்நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அந்நிதிக்கான மாதிரி காசோலையை பெற்ற பாதர் ரோபட் டேனியல் பிரான்சிஸ் சிவசுப்ரமணியத்திற்கு நன்றியை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − six =