புந்தோங் சந்தை வியாபாரிகள் மாநகர மன்றத்தை அணுகவே இல்லை:

புந்தோங் சந்தையில் கோவிட் 19 தொற்று அதிகமாக இருப்ப தாக வெளிவந்த தகவலைத் தொடர்ந்து அங்கு வியாபாரம் பாதிப்பு அடைந்திருப்பது அறிந்து புந்தோங் சட்டமன்ற உறுப் பினர், ஆதி,சிவசுப்ரமணியம் அது பொய்யான செய்தி என்று பகிரங்கமாக கூறினார். வியாபாரி கள் மீது அக்கறை இல்லாமலா அவர் அவ்வாறு செய்தார் என ஈப்போ மாநகரமன்ற உறுப்பினர், ஆதி.கணேசன் கேள்வி எழுப்பியுள் ளார். மேலும், வியாபாரிகள் சிவசுப்ரமணியத்தை தொடர்புக் கொண்டார்கள். ஆனால், பதில் கிடைக்கவில்லை என்று ஆறுமுகம் கொடுத்திருக்கும் அறிக்கை உண்மையல்ல. மாறாக, வியாபாரிகள் எங்களை தொடர்புக் கொள்ளவே இல்லை. ஏனென்றால், ஈப்போ மாநகர மன்றம் கீழ் புந்தோங் சந்தை இருக் கிறது. மேலும், அவ்வப்போது, ஈப்போ மேயர் வியாபாரிகளுக்கு உதவிநிதியை வழங்கி வருகிறார். கூடிய விரைவில் மேலும் 500 வெள்ளி உதவிநிதி கூட வியாபாரிகளுக்கு கிடைக்கவுள்ளது. தொடர்ந்து, சிவசுப்ரமணியம் தன்னுடைய சம்பளத்தில் 50 சதவீதம் மக்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். ஆதலால், அவரை பற்றி ஆறுமுகம் அவதூறாக பேச தேவை யில்லை. முதலில் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர், அறிக்கை விடலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =