புந்தோங்கில் 40 வயதை கடந்தவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை

பெக்கா பி40 திட்டத்தின் கீழ் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை என்பது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நல்ல விஷயமாகும். அந்த வகையில் பேராக் கிந்தா சஹாபாட் சிந்தா அலாம் சங்கம், ஈப்போ பாராட் நாடாளுமன்ற சேவை மையம், கல்வி சமூகநல ஆய்வு அறவாரியம் (இ.டபள்யூ.ஆர்.எப்) புந்தோங் ஈப்போ பாராட் நாடாளுமன்ற சேவை மையத்தில் இலவச மருத்துவ பரிசோதனையை நடத்தியது.
மக்களுக்கு பிரத்தியேகமாக செய்யப்பட்ட இந்த மருத்துவ பரிசோதனையில் ஏராளமானோர் பங்கேற்று, பயன்பெற்றனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மக்களின் இரத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை உட்பட பல முக்கிய மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.
இதனிடையே, அது தொடர்பாக, ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.குலசேகரன் பேசுகையில், நம்முடைய மக்களில் பி40 பிரிவினருக்கு உதவும் நோக்கத்தில் இந்த மருத்துவ பரிசோதனை பல இடங்களில் நடத்துகிறது. புந்தோங் வட்டாரத்தில் வசிக்கும் அதிகமான இந்தியர்கள் பயன்பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும். இது போன்ற மருத்துவ பரிசோதனைகளின் மூலம் மக்களின் ஆரோக்கியத்தை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மருத்துவ பரிசோதனை களோடு மட்டும் இந்த திட்டம் நின்று விடாது. அதனுடன், சர்க்கரை நோய் உட்பட்ட நோயாளிகளுக்கு சக்கர நாற்காலி, மருத்துவ உதவி கருவிகள், மருத்துவமனைக்கு செல்லும் போக்குவரத்து செலவினங்களுக்கும் பணம் ஒதுக்கப்படும் என்றார். இந்த பரிசோத னைகளின் வழி புற்றுநோய் இருப்பதை கண்டு பிடித்தால், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 1000 வெள்ளி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவ முகாமில் டாக்டர் முத்தையா, டாக்டர் ராஜ், கிரி, மாலா, நடராஜா குழந்தைவேலு ஆகியோர் இடம்பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − one =