புத்ரா பள்ளிவாசல் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மறுபடியும் திறக்கப்பட்டது

கொரோனா வைரஸ் கிருமி பரவும் என்ற அச்சத்தின் காரண மாக கடந்த மூன்று நாட்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மூடப்பட்டிருந்த புத்ரா பள்ளி வாசல் நேற்று புதன்கிழமை அப்பிரிவின ருக்கு மறுபடியும் திறக்கப்பட்டது.
சுற்றுப் பயணிகளுக்கு மறுபடி யும் அப்பள்ளிவாசலை திறக்கும் படி பள்ளிவாசலின் தலைமை இமாம் உத்தரவு பிறப்பித்ததி லிருந்து அந்நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று பள்ளி வாசலின் பேச்சாளர் தி மலேசியன் இன்சைட் டிடம் நேற்று தெரிவித்தார்.
அப்பள்ளி வாசலில் பணி யாற்றும் ஊழியர்களின் சுகா தாரத்தை முன்னிட்டு அப்பள்ளி வாசல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மூடப்பட்டது.
பொதுவாக சீனப் பெருநாள் விடுமுறையின் போது நிறைய சுற்றுப் பயணிகள் அப்பள்ளி வாசலுக்கு வருவதை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது அப்பள்ளி வாசல் ஊழியர்கள் கொரோனா வைரஸ் கிருமிகளுக்கு எதிராக தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டி ருக்கின்றனர் என்று அப்பேச் சாளர் மேலும் கூறினார்.
தினசரி ஏறக்குறைய 1,000 நபர்கள் மட்டுமே இப்பள்ளி வாச லுக்கு வருகை தருவது வழக்கம். எனினும் சீனப் பெருநாள் சமயங் களில் ஏறக்குறைய தினசரி 2,000 பேர் வருகையளிப்பார்கள் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே சீன நாட்டிலிருந்து வரும் சுற்றுப் பயணிகளின் பால் எந்த பாகுபாட்டையும் காட்ட வேண்டாம் என்று மிட்டா எனப் படும் மலேசிய உள்நாட்டு சுற்றுலாத் துறை சங்கத்தின் தலைவர் உஸாடி உடானி நாட்டிலுள்ள சுற்றுலாத் தளங்களைக் கேட்டுக் கொண் டார்.
நாட்டிலுள்ள அனைத்து சுற்று லாத்தலங்கள் அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத் துறை, கலை மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் முகமதின் கெத்தாப்பி நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − two =