புத்ரா பள்ளிவாசலை மூடுவது ஏற்புடையதல்ல

0

சுற்றுப்பயணிகள் வருகை அளிப்பதற்கு புத்ரா பள்ளிவாசல் உட்பட சுற்றுப்பயணிகளைக் கவரும் இடங்கள் மூடப் படுவதற்கு சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் டத்தோ முகமடின் கெத்தாப்பி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கு வருகையளிக் கும் அனைத்துச் சுற்றுப்பயணிகளும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று வலியுறுத்திய அவர், சுற்றுப் பயணிகளைக் கவரும் இடங்களை மூடுவது என்பது ஒரு தவறான நடவடிக்கையாகும் என்றார்.

கொரோனா வைரஸ் பரவி விடும் என்ற பயத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பள்ளி வாசலை மூடுவது என்று கடந்த வாரம் புத்ரா பள்ளிவாசல் முடிவெடுத்தது. முஸ்லிம்கள் தொழுவதற்கு மட்டும் அந்தப் பள்ளிவாசல் தற்போது திறக்கப் படுகிறது. “சுற்றுப் பயணிகள் செல்ல விரும்பும் இடங் களுக்கு, அவர்கள் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டாம்” என்று சுற்றுலா அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிற்குப் பின்னர் முகமடின் கெத்தாப்பி கூறினார்.

சீனாவிலுள்ள ஹுபெய் வட்டாரத்தில் உள்ள சுற்றுப் பயணி களுக்கு விசா வழங்குவதை மலேசிய அரசாங்கம் முடக்கி யுள்ளது. ‘மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் 2020’ ஐ முன்னிட்டு 30 மில்லியன் சுற்றுப் பயணிகளைக் கவர்வதுடன் 100 பில்லியன் வருமானத்தை ஈட்டுவது என்ற அரசாங்கத்தின் இலக்கை எவ்வகையிலும் இது பாதிக்காது என்று அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் நமக்கு சுற்றுப்பயணிகள் உள்ளனர் என்றார் முகமடின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − four =