புத்ரா பள்ளிவாசலில் அஸ்மின் துன் மகாதீரை சந்தித்தார்!

0

புத்ரா பள்ளிவாசலில் ஈகைத் திருநாள் தொழுகையின்போது அனைத்துலக வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி, துன் மகாதீரைச் சந்தித்தார்.
அஸ்மின் அலி வெளியிட்டிருக்கும் டுவிட்டர் செய்தியில், மகன்கள் மற்றும் மருமகன்களோடு பள்ளிவாசலுக்குச் சென்றபோது, மகாதீரை சந்தித்து அவருக்கு ஈகைத்
திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு காலத்தில் துன் மகாதீருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அஸ்மின் அலி, முஹிடினுடன் இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை உருவாக்கி, பக்காத்தான் ஆட்சியைக் கலைத்ததில் முக்கிய காரணகர்த்தாவாக இருந்துள்ளார்.பிகேஆரின் முன்னாள் துணைத் தலைவரான அஸ்மின் அலி, ஆட்சிக் கவிழ்ப்புக்கு, முன்னர் ஷெரட்டன் நகர்வை முன்னின்று நடத்தியவராவார்.
மகாதீரின் ஆட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மகாதீருக்குப் பின்னர் பிரதமராக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அஸ்மின் அலிக்கும் அன்வார் இப்ராஹிமிற்கும் இடையே பிரச்சினையை உருவாக்கி, மோதலுக்குத் தூண்டியதாக மகாதீர் குற்றம் சாட்டப்படுகிறார்.
பக்காத்தான் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர், மகாதீர் அஸ்மின் அலியை துரோகி என்று வசை பாடாமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. அஸ்மின் மிகவும் அதிருப்தி அடைந்திருந்தார். நான் அவருக்கு அணுக்கமாக இருந்தேன். அவர் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஒரு காரணமாக இருந்தது உண்மைதான் என்று மகாதீர் ஆசிய டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 9 =