புது கூட்டணி உருவாக வாய்ப்புண்டு

  15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அம்னோ, பாஸ் ஆகியவை அங்கம் வகித்துவரும் முவாஃபக்காட் நேஷனலில் பிளவு ஏற்பட்டால், புதியதொரு கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக அமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசியல் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது விவகாரங்கள் முளைத்து வருவது அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதில் எந்த அதிர்ச்சியான செய்திகளும் வர வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டார்.
  முதலில் அலையன்ஸ் கட்சி, அதன் பின்னர் பெரிக்காத்தான் 2.0, அதன் பின்னர் பாரிசான் என்று மாற்றம் கண்டது அம்னோவாகும். இந்தக் கூட்டணி 1973இல் தொடங்கி 2018 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. ஆகவே, அது பெரிக்காத்தான் 3.0 என்ற பெயரில் மீண்டும் உயிர் பெற்று துள்ளியெழ வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆயினும், அக்கூட்டணி மே 13 கலவரத்திற்குப் பின்னர் சரிவைக் கண்டு வந்துள்ளது. தேசிய முன்னணி 1973ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, அதில் அம்னோ, மசீச, மஇகா ஆகியவை இடம் பெற்றிருந்தன. 45 ஆண்டுகளுக்குப் பின்னர், 2018ஆம் ஆண்டில், நஜிப் ரசாக் காலத்தில் அது, 14ஆவது பொதுத்தேர்தலில் ஆட்சியை இழந்தது. இத்தோல்வியை அடுத்து, தேசிய முன்னணியில் உறுப்பியம் பெற்றிருந்த கட்சிகள் கூட்டணியை விட்டு விலகிய பின்னர், அதில் அம்னோ, மசீச, ம இகா , பிபிஆர் எஸ் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
  தற்போது முவாஃபக்காட் நேஷனல் கூட்டணியை அம்னோ முன்னிலைபப்டுத்துவதாகவும், அதிலிருந்து எந்தக் கட்சியும் விலக முடியும் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே பாஸ் கட்சி பெர்சத்துவுடன் அணுக்க உறவை வைத்திருப்பதால், முவாஃபக்காட்டில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக் கிழமை அம்னோ தனது உச்சமன்றக் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில் 15ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ, முஹிடின் யாசினின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  five × 3 =