புதிய தேர்தல் நடைபெறும்வரை நானே சபா முதலமைச்சர்!

0

சபா மாநில சட்டமன்றத்திற்கான புதிய தேர்தல் நடைபெற்று முடிவு தெரியும் வரை அம்மாநிலத்தின் சட்டப்பூர்வ முதல் அமைச்சராக நான் பணியாற்றுவேன் என்று டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் தெரிவித்தார்.
சபா மாநிலத்திற்கு நான் மட்டுமே இன்னமும் சட்டப்பூர்வ முதலமைச்சர். கடந்த பொதுத்தேர்தலில் சபா மக்கள் வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்தார்கள்.
இப்போது சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டாலும் இன்னும் 60 நாள்களில் புதிய தேர்தல் நடத்தப்படவுள்ளது.
மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை தேர்வு செய்யட்டும். தேர்தல் முடிவு தெரியும் வரை சபா முதலமைச்சராக நீடிப்பேன் என்றார் அவர்.
சபா மாநில சட்டமன்றத்தைக் கலைக்க மாநில ஆளுநர் துன் ஜுஹர் மஹிருதின் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சபா சட்டமன்றம் கலைக்கப்பட்டது. சபா மாநில அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் வகையில் புதிய தேர்தல் நடத்தப் படும். இந்த தேர்தலில் வெற்றிபெறப்போவது நீயா அல்லது நானா என்பதை சபா மக்கள் தீர்மானிக்கட்டும் என்று டான்ஸ்ரீ மூசா அமானுக்கு வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் சவால் விடுத்துள்ளார்.
சபா மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்க பல மாதங்களாக முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக் கொடுத்து வாங்க பேரம் பேசப்பட்டன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =