புதிய குறைந்தபட்ச சம்பளத்தை கொடுக்க முடியாது

  அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளமான 1,500 ரிங்கிட்டை தாங்கள் வழங்க முடியாத நிலையில் இருப்பதாக மலேசிய பாதுகாவலர் தொழில் கழகம் குறிப்பிட்டுள்ளது.
  தங்களின் பிரச்சினையைப் பற்றியும் இந்தப் புதிய சம்பளத்தை வழங்க முடியாதது பற்றியும் விளக்கமான கடிதத்தை பிரதமர், நிதியமைச்சர், மனிதவள அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி இருப்பதாக அதன் தலைவர் ரம்லி யூசோப் தெரிவித்தார்.
  தற்போது அனுசரிக்கப்படும் ரிம. 1,200 சம்பளத்தைக் கூட தங்களால் வழங்க முடியாத நிலையில் இருக்கும்போது ரிம. 1,500ஐ எவ்வாறு வழங்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
  புதிய சம்பளத்தை எங்களால் சமாளிக்க முடியாது என்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு புதிய சம்பளத் திட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
  தங்களது கழகத்தில் உறுப்பியம் பெற்றுள்ள 950 நிறுவனங்கள், அரசு எங்களின் சுமையைக் குறைக்க உதவிநிதி வழங்கத் தயாராக இருந்தால் புதிய குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக ரம்லி தெரிவித்தார்.
  எங்களின் கோரிக்கையை அரசு அலட்சியப் படுத்தினால், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றித் தீர்மானிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
  புதிய சம்பளத் திட்டமானது பாதுகாவலர் நிறுவனங்களை மூடுவிழா காணச் செய்யும் என்று அதன் தலைமை நிர்வாகி ஜெஃப் நோர் ஜெட்டி தெரிவித்தார்.
  இதனைப் பயன்படுத்தி சட்டவிரோத பாதுகாவல் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்துக்கு பாதுகாவலர்களை ஏற்பாடு செய்ய முற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  seven + six =