புதிய அரசாங்கத்திற்கு உதவ நான் தயார்

தமது சேவை தேவைப் பட்டால் புதிய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு உதவத் தாம் தயார் என சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராஹிம் கூறினார். அரசாங்கம் கைமாறியதால் தற்போதைய அரசியல் போராட்டம் சவால் மிக்கதாக இருக்கும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். தற்போதைய அரசியல் போராட்டம் எளிதில் முடிந்து விடாது. கடுமையான சூழ்நிலையை நடப்பு அரசாங்கம் எதிர்நோக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “எனது சேவை தேவைப்பட்டால் புதிய அரசாங்கத்திற்கு நான் தயார்” என முகநூலில் அவர் பதிவேற்றம் செய்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசாங்கத்தை உறுதி செய்ய பாஸ் முக்கிய பங்காற்ற வேண்டும் என காலிட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + fourteen =