புதிய அமைச்சரவையில் ஊழல் புரிந்தவர்கள் இடம்பெறக்கூடாது

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அமைக்கவிருக்கும் அமைச்சரவையில் ஊழல் மற்றும் நீதிமன்ற குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியுள்ள தனிநபர்கள் இடம்பெறக்கூடாது என கிளந்தான் மந்திரி பெசார் அமாட் யாக்கோப் கூறினார். அமைச்சரவை நேர்மை மற்றும் நாணயம் உள்ளதாக இருக்க வேண்டும். ஆகையால் ஊழல் புரிந்தவர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்றார் அவர்.

ஊழல் புரிந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றால், அது பொதுமக்களின் பார்வைக்கு ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் என்றார் அவர். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள அம்னோ தலைவர்களுடன் தம்மால் ஒத்துழைக்க முடியாது என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஏற்கெனவே கூறியிருந்தார். முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் துன் ரசாக், முன்னாள் துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி, அம்னோ முன்னாள் பொதுச் செயலாளர் தெங்கு அட்னான், அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினர்களான புங் மொக்தார் ராடின், அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம், முகமட் இசா அப்துல் சமாட் உட்பட பலர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − two =