புக்கிட் பிளாண்டோக், கம்போங் இந்தியாவில் சமூக மண்டபத்தைத் திறந்து வைத்தார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கடந்த ஞாயிறன்று இங்குள்ள புக்கிட் பிளாண்டோக், கம்போங் இந்தியா கிராமத்தின் சமூக மண்டபம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரும் பி. கே.ஆர். கட்சியின் தேசியத் தலைவருமாகிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். அவர் தமதுரையில் மிகவும் அழகிய மண்டபமாகக் காட்சியளிக்கும் இம்மண்டபத்தை எப்பொழுதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரித்து திருமணங்கள், பிறந்தநாள் வைபவங்கள், சமய மற்றும் சமூக விழாக்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு இக்கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார். இம்மண்டபம் ஏறக்குறைய 180,000.00 வெள்ளி செலவில் புதுப்பிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு சுவா சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் யேக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு போர்ட்டிக்சன் நகராண்மைக்கழகத் தலைவர், போர்ட்டிக்சன் மாவட்ட மன்றத் தலைவர், கிராமத் தலைவர்கள், சுவா சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராம சமூக நிர்வாக மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் வருகை புரிந்து மதிய உணவுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது.
பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இக்கிராமத்தில் கொள்கலனில் (ஊடிவேயiநேச) மூன்று குழந்தைகளுடன் சிரமத்துடன் வசிக்கும் திருமதி நாகக்கன்னி கிருஷ்ணன் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்து நிதி உதவி வழங்கியதுடன் கூடிய விரைவில் நிலம் இருப்பின் வசதி குறைந்தோருக்கான வீடு ஒன்றினைக் கட்டித் தருவதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =