புக்கிட் செம்பிலான் தோட்டத் தமிழ்ப்பள்ளி பரிசளிப்பு விழா

0
பெற்றோர்கள் மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கவேண்டாம் என்று புக்கிட் செம்பிலான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் கி.பரமசிவன் பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டார். 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பற்றிய தகவல்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.இப்பள்ளியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு பேசினார். இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களின் ஆதரவோடு இந்த பரிசளிப்பு விழா நடைபெற்றதாக தலைமையாசிரியர் கூறினார்.
புக்கிட் செம்பிலான் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரும் தொழில் முனைவருமான கு.விஜயன் என்பவர் மாணவர் பரிசளிப்பு விழாவிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டதாக தலைமை ஆசிரியர் பரமசிவன் கூறினார். இந்த நிகழ்ச்சியை தொடக்கிவைத்து தொழில்முனைவர் விஜயன் பேசுகையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த உதவியை செய்ய முடியும் என்று அவர் கூறினார்.


தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்ற மாணவர்களைவிட எல்லாதுறைகளிலும் சிறப்பாக இருக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கே அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமைக்கும் கு.விஜயன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் நீல.உத்தமன் உட்பட மற்றவர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 18 =