புக்கிட் அமான் அனைத்துலக தொடர்பு குற்றச்செயல் பிரிவின் துணைத் தலைமை இயக்குநராக ரவிச்சந்திரன் பதவி உயர்வு

பேராக் மாநில காவல் துறையின் போதைப் பொருள் குற்றச்செயல் விசாரணை பிரிவின் தலைவராக இருந்து வந்த துவான் ரவிசந்திரன் ராமச்சந்திரனுக்கு சீனியர் துணை கமிஷனர் பதவி உயர்வு கிடைத்துள்ளது.

அந்த பதவி உயர்வின் வழி அவருக்கு புக்கிட் அமான் அனைத்துலக தொடர்பு குற்றச்செயல் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் பதவி வகிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே, தாம் 38 ஆண்டுகளாக காவல் துறையில் இருப்பதாகவும் தமக்கு இந்த பதவி உயர்வு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் நேற்று பேராக் மாநிலத் தலைவர், டத்தோ ராசாருடின் முன்னிலையில் தமது பதவியை லீ கிங் சுவானிடம் ஒப்படைத்த பின்னர் செய்தியாளரிடம் தெரிவித்தார். இனி பேராக் மாநில போதைப் பொருள் குற்றச்செயல் விசாரணை பிரிவின் தலைவராக ஏசிபி லீ கிங் சுவான் பதவி வகிப்பார்.

தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய டத்தோ ராசாருடின், இதுவரை ரவிசந்திரன் தம்முடைய பணியைச் சிறப்பாகவே செய்துள்ளார். அவருக்கு சீனியர் துணை கமிஷனராக பதவி உயர்வு கிடைத்திருப்பது சரியானதே. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். அதே வேளை, பேராக் மாநில போதைப் பொருள் குற்றச்செயல் விசாரணை பிரிவின்புதிய தலைவர், லீ கிங் சுவானுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =