புகை பிடிப்பது ஷரியா சட்டத்துக்கு முரணானது

0

உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதால் புகை பிடிப்பது ஷரியா சட்டத்துக்கு முரணானது என பிரதமர் துறை அமைச்சர் பூஸியா சாலே தெரிவித்துள்ளார்.அது இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணானது என ஃபாட்வா மன்றம் அறிவித்திருந்தாலும் அதனைத் தடுக்க முடியாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்த நடைமுறையைக் கண்காணிக்கும் அதிகாரம் இஸ்லாமிய விவகார இலாகாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.ஷரியா சட்டம் மனிதர்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதால், அந்தக் கட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஃபாட்வா மன்றமும் 1995ஆம் ஆண்டில் நடந்த 37ஆவது மலேசிய இஸ்லாமிய விவகார மாநாடும் மேற்கண்ட முடிவை அறிவித்ததாக பூஸியா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here