புகை எதிர்ப்பு முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக ஏர் ஆசியா புளூ ரிப்பன் சான்றிதழை பெறுகிறது

0

புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்கும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பதற்கும் விதமாக ஏர் ஆசியா சுகாதார மலேசிய அமைச்சகத்திடமிருந்து புளூ ரிப்பனின் (க்ஷடரந சுைெடெிே) இரண்டு முக்கிய சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. ஏர் ஆசியாவில் புகை இல்லாத சூழலை வழிநடத்தும் ஒரு நபராக ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸுக்கு ஒரு சான்றிதழும் ஏர் ஆசியாவின் உலகளாவிய தலைமையகமான ரெட்கியுவிற்கு (சுநனணு) ஒரு சான்றிதழும் வழங்கப்பட்டது.
டத்தோ ஸ்ரீ டாக்டர் துல்கிப்ளி அஹமட் டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸுக்கு சிறந்த சாதனை விருதை வழங்கினார், அதே நேரத்தில் ப்ளூ ரிப்பன் சான்றிதழ் 22 நவம்பர் 2019 அன்று சுகாதார அமைச்சினால் வழங்கப்படும்.
ஏர் ஆசியா 120 அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் புகை மற்றும் வேப் இல்லாத சூழலை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டது.
ஏர் ஏசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், ஆரோக்கியமான சூழலை நாம் உருவாக்க வேண்டும்; புகைபிடித்தல் மற்றும் வாப்பிங் போன்ற பழக்கவழக்கங்களை கட்டுப்படுத்துதல்வேண்டும். அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எங்களால் முடிந்த அனைத்தையும் செயல்படுத்துவோம்” என்று அவர் கூறினார்.
மலேசியாவின் சுகாதார அமைச்சர் கூறுகையில், ஏர் ஆசியாவின் நடவடிக்கையை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் புளூ ரிப்பன் சான்றிதழ் வழங்கப்பட்டதற்கு நான் அவர்களை வாழ்த்துகிறேன். இதுபோன்ற முயற்சிகள் புகை இல்லாத சூழலைக் கொண்டு வரும் மற்றும் சுகாதார நன்மைகள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்க உதவும். மலேசியாவிற்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் இந்த நடவடிக்கையில் ஏர் ஆசியாவில் சேர மற்ற அமைப்புகளை நான் ஊக்குவிக்கிறேன். ” என்று அவர் மேலும் கூறினார்.
புளூ ரிப்பன் பிரசாரம் உலக சுகாதார அமைப்பின்(றுழடீ) கீழ் 2012இல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது புகையிலை கட்டுப்பாடு குறித்து உதவிய தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்புகளை அங்கீகரித்து பாராட்டுகிறது. மேலும், புகை இல்லாத சூழலை உருவாக்குவதில் உதவிய தனிநபர்களுக்கு புளூ ரிப்பனின் சிறந்த சாதனை விருது வழங்கப்படுகிறது என்று இவ்விழாவில் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − nine =