புகைமூட்டம் குறைந்து காற்றின் தரம் மிதமாக உள்ளது

0

தீபகற்பம், சபா மற்றும் சரவாக்கில் ஒட்டுமெத்த 68 பகுதிகளின் காற்றின் தரக்குறியீடு 100க்கும் குறைவாக உள்ளது. நேற்று போலவே இன்றும் காற்றின் தரம் சிறப்பாக உள்ளது. இன்று காலை மணி 8 முதல் 58 பகுதியில் காற்றின் தரம் மிதமாக உள்ளது.

நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்ததே காற்றின் தரம் சீர் அடைந்தற்குக் காரணம் என கூறப்படுகிறது. பெர்லீஸ், பேராக், கெடா, திராங்கானு, பகாங் போன்ற பத்து இடங்களில் காற்றின் தரம் சீர் அடைந்து மக்கள் அச்சமின்றி உள்ளனர்.

ஜொகூரின் செகமாட்டில் காற்றில் குறியீடு 85ஆக உள்ளது. இது மிதமானதாகவும் கருதப்படுகின்றது. பேராக் தஞ்சோங் மாலிமில் மிகவும் சிறந்த நிலையில் காற்றின் தரகுறியீடு 35ஆக உள்ளது. மற்ற சில இடங்களிலும் விரைவில் புகைமூட்டம் ஒரு முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =