புகைக்க தடைச் சட்டம்; உணவகத்தாருக்கு பாதிப்பில்லை

0

இவ்வாண்டு தொடக்கம் முதல் உணவகங்களில் புகைப்பதற்கு கட்டாய தடைச் சட்டம் அமல்படுத்தப் பட்டிருப்பதால், உணவக உரிமையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
உண்மையில் இது எங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புதான். இத்திட்டத்தை அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்ததால், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டனர். இதனால் அதன் உரிமையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்குவதாகச் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் உணவகத்தில் புகைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் நாங்கள் எவ்வித நட்டத்தையும் எதிர்நோக்கவில்லை என ஸ்ரீ கெம்பாங்கான் வட்டார உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ஏனெனில் குடும்பத்தோடு உணவகத்திற்கு வருபவர்கள் புகைப்பவர்களின் நடவடிக்கையால் முகம் சுளிக்கின்றனர். அந்த சிகரெட் புகை மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளது.
எனவே அரசாங்கத்தின் இத்திட்டத்திற்கு நாங்கள் எப்போதும் முழு ஆதரவு வழங்குவோம். ஆனாலும் உணவகங்களில் புகைப்பவர்களை ஊடகத்தில் குறிப்பாக தொலைக்காட்சியில் வெளியிடுவதற்கான அவசியம் தேவையில்லை.
கூடுமானவரை அவர்களுக்கு அபராதம் மட்டும் விதித்தால் போதுமானது என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில் தொலைக்காட்சியில் அவர்கள் காட்டப்படுவதால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் கருத்துரைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + five =