பீர் விற்பனைக்குத் தடையில்லை

கோலாலம்பூரில் உள்ள சில்லறை வியாபாரக் கடைகளில் பீர் விற்பனைக்குத் தடையில்லை என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெளிவுபடுத்தினார்.
காரணம் பீர் போதையூட்டும் மதுபானங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பலசரக்குக் கடைகளில் போதையூட்டும் மதுபானங்கள் விற்பதற்கு மட்டுமே தடை விதிக்கப் பட்டுள்ளது என அவர் சொன்னார்.
அரசாங்கத்தின் இந்த புதிய மதுபான உரிம நிபந்தனையில் சமயத்திற்கோ மதத்திற்கோ தொடர்பு எதுவும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
ஐரோப்பா உட்பட இதர நாடுகளிலும் இந்த நிபந்தனைகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
நமது அண்டைநாடான சிங்கப்பூரிலும் இந்த நிபந்தனை அமலில் இருப்பதாக அனுவார் சுட்டிக்காட்டினார்.
மதுபான விற்பனையை ஒருமுகப்படுத்தவே கோலாலம்பூர் மாநகர் மன்றம் இந்த நிபந்தனையை அறிமுகப் படுத்துவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here