பீடோர் காவல் நிலைய சீரமைப்புக்கு சிவநேசன் வெ.2,000 நிதி வழங்கினார்


இங்கு அமைத்திருக்கும் பீடோர் காவல் நிலைய சீரமைப்புப் பணிக்காக சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் வெ.2,000 நிதி வழங்கியுள்ளார். இந்நிதியை அக்காவல் நிலயத்தின் தலைவர் ஏசிபி சையிட் முகமது பாஹிதர் சையிட் அகமது மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
இந்த ஆண்டு தொடக் கத்திலும் சுங்கை சட்டமன்ற சார்பில், இதே காவல் நிலையத்திற்கு நிதி வழங்கப்பட்டது. காவல் துறையினர் தங்கள் பணியை செவ்வனே செய்து மாவட்டத்தில் குற்றவியல், பொது அமைதி, சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான கடமையில் சிறப்பாகவும் செயல்படுகின்றனர்.
மேலும், முழு ஊரடங்கு நேரத்தில் காலத்தைக் கருதாமல், தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு, கடமையே கண்ணாக கருதிச் செயல்படும் பீடோர் காவல் நிலைய அதிகரிகள் அனைவரையும் சிவநேசன் சட்டமன்றம் சார்பில் வாழ்த்துகளைக் கூறிக்கொண்டார்.
,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 9 =