பீடோங் செமிலின் பகுதியில் காற்று தூய்மைக் கேடு கட்டுப்பாட்டில் உள்ளது

0

பீடோங் செமிலின் பகுதியில் இருக்கும் குப்பை கொட்டும் இடத்தில் தீபிடித்து எரிந்த சம்பவம் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டான் கொக் இயோ கூறினார். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகாரிகள் தினசரி நிலவரத்தை மக்களுக்கு தெரிவிப்பர் என்று அவர் நேற்று இங்கு கூறினார்.
இதுவரை 60வது விழுக்காட்டு தீ அணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். காற்றின் தூய்மை கேட்டை இயற்கை சுற்றுச் சூழல் அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அவர் சொன்னார். பொது மக்கள் திறந்த வெளியில் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இத்தீசம்பவம் ஏற்பட்ட நாளிலிருந்து சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் பொது மக்கள் நலன் கருதி அச்சம்பவ இடத்தில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக அவர் கூறினார். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று இயோ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − fourteen =