பீகாரில் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. பாட்னாவில் கடந்த ஒரு வாரமாக மழை விடாது பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்படுகின்றனர். பாட்னாவில் மட்டும் பல்லாயிரம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பீகார் தலைநகர் பாட்னா உள்பட 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் ஓடும் புன்புன் மற்றும் கங்கை ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்குதல், சுவர் இடிந்து விழுதல், மரம் சாய்ந்து விழுதல் மற்றும் மின்சாரம் தாக்குதல் ஆகியவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 73-ல் இருந்து 97 ஆக உயர்ந்துள்ளது என பேரிடர் மீட்புப்படையினர் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + ten =