பி40 குடும்பத்தில் நிகழும் இறப்புக்கு உடனடி உதவி

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பி40 குடும்ப உறுப்பினர்கள் மரணித்தால் அக்குடும்பத்தினருக்கு உடனடியாக அரசு ரிம. 1000 வழங்க வேண்டும் என்று ஜொகூர் மாநில சட்டமன்ற கூட்டத் தொடரில் திராம் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். தற்போது நாட்டில் நிகழும் கோவிட்-19 தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக் குறியாக இருக்கிறது. ஒருபுறம் நிதி சுமை மறுமுனையில் அன்றாடப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டால் உடனடியாக இறுதிச் சடங்கு செய்வதற்கு பணம் இல்லாமல் அவர்கள் மிகவும் தத்தளிக்கிறார்கள். இதனால் பலர் வட்டி முதலையிடம் சிக்கிக் கொள்வதாகவும் கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். எனவே இந்த சிக்கலிலிருந்து மீள்வதற்கு மாநில அரசாங்கம் இறப்பு நிகழ்ந்த அக்குடும்பத்தினருக்கு உடனடியாக ரிம. 1000 வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர் ஆண்டுதோறும் ஜொகூர் மாநில அரசு வரவு செலவு திட்டத்தில் வருடத்திற்கு ஒரு மில்லியன் இறப்பு நிதிக்காக ஒதுக்க வேண்டும் என்று கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். மேலும் இந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து இனம் சமயம் என்று பாராமல் அனைத்து சமூகங்களுக்கும் இவ்வுதவி அளிக்கப்பட வேண்டும் என கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − three =