பி40 குடும்பங்களைச் சேர்ந்த 25 இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சியைப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச. 2- ணுஐ குழுமத்தின் சமூக மாற்றத்திற்கான ரிதம் அறவாரியம் மற்றும் மை ஸ்கீல் அறவாரியத்தின் ஒத்துழைப்பில் பி 40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பை சேர்ந்த 25 இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். மாற்றத்திற்கான புதிய முயற்சி என்ற இலக்கின் அடிப்படையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் 12 மாத கால பயிற்சி திட்டத்தில் அந்த 25 இளைஞர்கள் கலந்துகொண்டு முழுமையாக பயன் அடைந்தனர். 16 முதல் 18 வயதுடைய இளைஞர்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குழு கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி இந்த பயிற்சியை தொடங்கினர். பொறுப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்பை பெறக்கூடிய இளைஞர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்பதற்காக வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியை முடித்த அவர்கள் அனைவரும் அண்மையில் சான்றிதழை பெற்றுக்கொண்டனர். தொழில் திறன் பயிற்சியையும் அடிப்படை வாழ்க்கை திறன் பயிற்சியையும் பெற்றுக்கொண்டதன் மூலம் இந்த இளைஞர்கள் கூடுதல் சம்பள வசதியைக் கொண்ட வேலை வாய்ப்பை பெற முடியும் என அந்த மாணவர்களின் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் நிகழ்வில் உரையாற்றியபோது ரிதம் அறவாரியத்தின் தலைவரான டத்தின்ஸ்ரீ உமையாள் தெரிவித்தார். கடந்த 12 மாதங்களாக இந்த தொழில் திறன் பயிற்சியில் நாம் இடம்பெற்றிருந்தோம். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்போடும் லட்சியத்தோடும் பயிற்சியை நீங்கள் முடித்துக்கொண்டுள்ளதால் இனி உங்கள் மீது நம்பிக்கை வைத்து தன்னம்பிக்கையோடு வாழ்க்கையின் அடுத்த அடிகளை வைக்க வேண்டும் என டத்தின்ஸ்ரீ உமையாள் கேட்டுக்கொண்டார். தொழில் திறன் பயிற்சியோடு மின்னியல் இணைப்பை ஏற்படுத்தும் இரண்டாவது கட்ட பயற்சியையும் இந்த மாணவர்கள் முடித்துள்ளனர், மனித வள அமைச்சின் கீழ் தொழில் திறன் மேம்பாட்டுத்துறையின் அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களிடம் அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதனிடையே சமூக உருமாற்ற திட்டத்தில் மை ஸ்கீல் மீது நம்பிக்கை வைத்து மாணவர்களை அனுப்பிவைத்த ரிதம் அறவாரியத்திற்கு மை ஸ்கீல் தலைமை செயல் அதிகாரி தேவ சர்மா தமது நன்றியைம் தெரிவித்தார். இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு அவர்கள் நிதி மற்றும் சேமிப்பு திட்டங்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 24 மாதங்களுக்கு அவர்களை அணுக்கமாக கண்காணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தேவ சர்மா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + twelve =