பி20 வர்க்கத்தினருக்கு மட்டும் பெட்ரோல் சிறப்புக் கழிவை வழங்குங்கள்

0

வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாததிற்குள் எம்40 வர்க்கத் தினருக்கு பெட்ரோல் சிறப்புக் கழிவு பதிவை அமல்படுத்தப் போவதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எம்40 வர்க்கத்தினரைக் காட்டிலும் பி20 வர்க்கத் தினருக்கு இந்த சிறப்புக் கழிவை அரசாங்கம் வழங்குவது ஏற்புடையதாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர் கார்மெலோ ஃபெர்லித்தோ என்பவர் கூறினார்.
இந்தத் திட்டமானது பொதுமக்களுக்கு எவ்வகையில் நன்மையளிக்கும்? எத்தனை காலத்திற்கு இந்த சிறப்பு சலுகைகளை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்? உள்ளிட்ட பல கேள்விகள் இன்னும் மக்களிடையே இருந்து வருகிறது.
இத்திட்டம் வாகன மோட்டிகளின் பெட்ரோல் செலவை எவ்வாறு ஈடுகட்டும் என்பது குறித்து அரசாங்கம் தெளிவான விளக்க அறிக்கையை வெளியிட வேண்டும். சில வேளைகளில் அரசாங்கத்தின் இத்திட்டம் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே தாம் இதைக் கூறுவதாக அவர் கருத்துத் தெரிவித்தார்.
எம்40 வர்க்கத்தினரைக் காட்டிலும் பி20 வர்க்கத்தினர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆக அவர்களை விட இவர்களுக்கே இந்த உதவி இப்போது அவசியமாக உள்ளது.
எனவே பெட்ரோல் சிறப்புக் கழிவுத் திட்டத்தில் பி20 வர்க்கத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஓர் அமைப்பின் ஜனநாயக மற்றும் பொருளாதார விவகாரப் பிரிவின் தலைவராக இருக்கும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + seven =