பிள்ளைகள் தடுப்பூசி செலுத்த சில பெற்றோர்கள் இன்னும் தயாராகவில்லை

தங்கள் பிள்ளைகளை கோவிட் தடுப்பூசிச் செலுத்திக் கொள்ள அனுமதிப்பதில் ஒருசில பெற்றோர்கள் இன்னும் தயாராக வில்லை என்று துணைக் கல்வி அமைச்சர், செனட்டர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்தார். இதில் எப்படியிருப்பினும் 12 முதல் 17 வயதிற்குட்பட்டப் பதின்ம வயதினருக்குத் தடுப்பூசிச் செலுத்தும் நடவடிக்கைத் தற்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் இவ்விவகாரம் அவ்வளவு முக்கியமானதாக இல்லை. பிள்ளைகள் தடுப்பூசிச் செலுத்த அனுமதிக்காதப் பெற்றோர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். எனினும், அந்த எண்ணிக்கை அவ்வளவு அதிகமாக இல்லை. இதற்கானத் தரவையும் அமைச்சு கொண்டிருக்கவில்லை. பதின்ம வயதினருக்கானத் தடுப்பூசிச் செலுத்தும் நடவடிக்கை கள் இன்னும் தொடக்கக் கட்டத்தில்தான் இருப்பதால் இதில் நிறைய விவகாரங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பெற்றோர்கள் தொடக்கத்தில் மறுத்து தடுப்பூசியின் முக்கியத் துவம் தொடர்பில் விளக்கமளிப்பு வழங்கப்பட்டப் பின்னர் தடுப்பூசிச் செலுத்திக் கொள்வதைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்கின்றனர் என்று சிரம்பான் நகராண்மைக் கழகத் தடுப்பூசி மையத்தில் மாணவர்களுக்கானத் தடுப்பூசிச் செலுத்தும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டப் பின்னர் பத்திரிகை யாளர்களிடம் டாக்டர் மா ஹாங் சூன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − nine =