பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள்: மலாக்கா முத்தமிழ் மன்றம் பண உதவி வழங்கும்

0

மலாக்கா முத்தமிழ் மன்றம் இயல், இசை, நாடகம், கல்வி, விளையாட்டு சமூக சேவை என்று பல வகையில் செயல்பட்டு வரும் மலாக்கா முத்தமிழ் மன்றம் தன் ஆண்டு செயல் திட்டங்களில் ஒன்றாக இம்முறையும் குறிப்பிட்டபடி வரும் 2020ஆம் ஆண்டு மன்ற அங்கத்தினர்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தால் அவர்களுக்கு முதல் கட்ட உதவியாக பண உதவியும் பரிசும் வழங்கப்படும் என்று மன்றத் தலைவர் ஆர்.எஸ். ரகு தெரிவித்துக் கொள்கின்றார். நம் மாணவர்கள் தமிழ்ப் படிக்கவும்; தமிழை வாழ வைக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் மன்ற அங்கத்தினர் மாணவர்களுக்கு முடிந்த அளவு இந்த சிறு சிறு உதவிகளை செய்து வருகின்றனர்.
தமிழ்ப் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப விரும்புவோர் பண உதவித் தொகை மற்றும் சிறப்புப் பரிசுகள் பெற வரும் 10-12-2019 ஆம் தேதிக்குள் பெயர் மற்றும் மாணவர்களின் பெயரையும் பதிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேல் விவரத்திற்கு மன்றத் தலைவர் ஆர். எஸ். ரகு 012-3655928, மன்றச் செயலாளர் பி.சுப்பிரமணியம் 019-6876647, மன்றத் துணைத் தலைவர் கே. நடராஜன் 019-2563541

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − twelve =