பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் புள்ளி விவரம்: 98.10 சதவீத தேர்ச்சியுடன் கோவை முதலிடம்

0

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் பார்க்கலாம்.
தேர்வு முடிவுகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிளஸ்1 பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
*பள்ளி மாணாக்கராகவும், தனித் தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை – 8,30,654*பள்ளி மாணாக்கராய் தேர்வு எழுதியோர் –  8,15,442* மாணவியரின் எண்ணிக்கை- 4,35,881* மாணவர்களின் எண்ணிக்கை – 3,79,561* பொதுப் பாடப்பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 7,63,424* தொழிற்பாடப்பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 52,018
தேர்ச்சி விவரங்கள்:
*  தேர்ச்சி பெற்றவர்கள் – 96.04 சதவீதம்*  மாணவியர் 97.49 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்*  மாணவர்கள் 94.38 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்*  மாணவியர் மாணவர்களை விட 3.11 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கூடுதல் விவரங்கள் (தமிழகத்தில் அமைந்துள்ள பள்ளிகள்)
*  மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 7249*  100 சதவீத தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை – 2716
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்
1. அரசுப்பள்ளிகள் – 92.71 சதவீதம்2. அரசு உதவி பெறும் பள்ளிகள் – 96.95 சதவீதம்3. மெட்ரிக் பள்ளிகள் – 99.51 சதவீதம்4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் – 96.20 சதவீதம்5. பெண்கள் பள்ளிகள் -97.56 சதவீதம்6. ஆண்கள் பள்ளிகள் – 91.77 சதவீதம்
பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்
1. அறிவியல் பாடப்பிரிவுகள் – 96.33 சதவீதம்2. வணிகவியல் பாடப் பிரிவுகள் – 96.28 சதவீதம்3. கலைப் பிரிவுகள்- 94.11 சதவீதம்4. தொழிற்பாடப் பிரிவுகள் – 92.77 சதவீதம்
முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் 
1. இயற்பியல் -96.68 சதவீதம்2. வேதியியல் – 99.95 சதவீதம்3. உயிரியல் – 97.64 சதவீதம்4. கணிதம் – 98.56 சதவீதம்5. தாவரவியல்- 93.78 சதவீதம்6.விலங்கியல் – 94.53 சதவீதம்7. கணினி அறிவியல் – 99.25 சதவீதம்8. வணிகவியல் – 96.44 சதவீதம்9. கணக்குப் பதிவியல் – 98.16 சதவீதம்
மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள்
1.கோயம்புத்தூர் – 98.10 சதவீதம்2. விருதுநகர் – 97.90 சதவீதம்3. கரூர் -97.51 சதவீதம்
தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கரின் மொத்த எண்ணிக்கை 2819. இதில் 2672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 14 =