நாட்டில் உள்ள பிளஸ் நெடுஞ்சாலைகளின் குத்தகைகளை நீட்டிப்பது தொடர்பில் அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்துக்கும் பிளஸ் நெடுஞ்சாலை குத்தகை நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை 2058 ஆம் ஆண்டு வரையில் நீட்டிப்பது தொடர்பில் , இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் மூலமாக கிடைக்கக் கூடிய லாபம், சாலைக் கட்டணம், ஆகியவற்றை கருத்திற் கொண்டு, சில விவகாரங்களை மறுபரிசீலிக்க வேண்டியுள்ளதாக பொதுப்பணித்துறை துணையமைச்சர் டத்தோ எடின் சஸ்லி சீட் தெரிவித்தார்.
38 ஆண்டுகளுக்கு, பிளஸ் நெடுஞ்சாலைக்கான குத்தகையை நீட்டிப்பதன் வாயிலாக, அரசாங்கம் 4,200 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியுமென, இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் முடிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.