பிறை கடற்கரை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மண்ணரிப்பு பிரச்சினைக்குத் தீர்வு

இங்குள்ள கடற்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை சுற்றிலும் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பு பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படுமென செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் கே.ஜேசன் ராஜ் தெரிவித்தார்.
கடற்கரையை ஒட்டி இந்த ஆலயம் அமைந்துள்ளதால்,அலைகள் ஏற்படும் போது,அதனை சுற்றியுள்ள சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு நீர்க் கசிவும் உண்டாகிறது.இதனால் ஆலயத்திற்கு பெரும் விளைவுகள் ஏற்படும் நிலை உள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக கூறினார்.
நேற்று ஆலய நிர்வாகத்தினருடன் ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட அவர், இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாக சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =