பிறந்த குழந்தையை தாயிடம் ஒப்படைக்க மருத்துவமனை மறுப்பு

மணிமாலாவின் பிறப்பு பத்திரத்தில் பெற்றோர்கள் பெயர் இல்லாததால் சுங்கை பட்டாணி மருத்துவமனையில் பிறந்த குழந்தையை தாயிடம் ஒப்படைக்க மறுத்துவமனை மறுப்பு.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்த மணிமாலாவின் குழந்தைக்கு மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட பிறகு,பிறந்த குழந்தைக்கு முறையான தாயின் ஆவணங்கள் இல்லாததால்,குழந்தையை தாயிடம் ஒப்படைக்க முடியாத பட்சத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை ஆரோக்கியமாக பாதுகாப்பில் உள்ளது.
தாய் மணிமாலாவின் பிறந்த சூராவில் பெற்றோரின் பெயர் இல்லாததால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது தொடர்பாக கெடா மாநில சமூக சேவகி சாய்சரளாவின் உதவியை நாடியதால்,
குழந்தையை மீட்டெடுக்க போராடி வருகிறார் சரளா.
நேற்று கெடா மாநில மந்திரி பெசாரின் இந்திய பிரிவு சிறப்பு அதிகாரி குமரேசனின் பார்வைக்கு கொண்டு சென்ற பின் மணிமாலாவிடம் உண்மை நிலவரங்களை சேகரித்த அடுத்த நிமிடம் முதல் சுங்கை பட்டாணி மருத்துவமனை சமூக நல பிரிவு அதிகாரிகளை சந்தித்தார் குமரேசன்.
இந்த பிரச்சினையினை தீர்க்க கெடா மாநில இளைஞர் பிரிவு தலைவர் ஜீவபாலன் ஜெயராமன்,கெடா திராவிடர் கழக தலைவர் கதிரவனுடன் ஆலோசனை நடத்தி,பிள்ளையை பெற்ற தாயிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் சாய் சரளாவுடன் களமிறங்கினார் குமரேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + eight =