பிறந்த ஆண்டின்படி 18 வயதினருக்கு தளர்வளிக்க அமைச்சு கோரும்

மாணவர்களின் பிறந்த தேதியின்படி இல்லாமல் பிறந்த ஆண்டின் அடிப்படையில் 18 வயது கொண்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வளிக்கும்படி கோவிட் நோய்த்தடுப்புச் சிறப்புப் பணிக்குழுவிடம் உயர்கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்யும் என்று அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அகமட் தெரிவித்தார். இதன் மூலம் கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை பிறந்த தடுப்பூசிச் செலுத்தியவர்களுக்கு உயர்கல்வி மையங்களில் பயில வாய்ப்பு வழங்கப்படும். ஒருசில மாணவர்கள் இன்னும் 18 வயதை அடையாதக் காரணத்தால் தடுப்பூசிச் செலுத்தும் மையங்களில் பணியாளர்கள் அவர்களை அனுமதிப்பதில்லை. இந்த நிலை பல்கலைக்க்கழக, கல்லூரி வளாகத்திற்கு மீண்டும் திரும்பும் மாணவர்களுக்குச் சிரமத்தைத்தான் ஏற்படுத்தும் என்று தமது டுவீட்டரில் பாரிட் சூலோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் நோராய்னி அகமட் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =