பிரெஞ்சு ஓபன் – சிட்சிபாஸ், ஸ்வெரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெத்வதேவை சந்தித்தார்.
இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6,7-5 என்ற கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 46ம் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த டேவிடோவிச் போகினாவுடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வெரேவ் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டேவிடோவிச் போகினாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஸ்வெரேவ் முதல்முறையாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் அரையிறுதியில் சிட்சிபாஸ், ஸ்வெரேவை சந்திக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − three =