பழுது ஏற்பட்டு குடியிருப்பாளர்கள் சிக்கிக் கொண்ட, இங்குள்ள பிரிமா வியூ அடுக்ககத்தின் மின்தூக்கிகள் விரைந்து சீரமைக்கப்படமென பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் கூறினார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அவர், நேரடியாக சம்பந்தப்பட்ட குடியிருப்புக்குச் சென்று குடியிருப்பாளர்களையும் , நிர்வாகத்தி னரையும் சந்தித்ததாக சொன்னார்.இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணும்படி அடுக்ககத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாக கூறினார்.
இந்த மின்தூக்கி பழுது குறித்து விரைவில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருடன் கலந்து பேசி,நல்ல முடிவை எடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அண்மையில் திடீரென ஏற்பட்ட பழுதால்,குடியிருப்பாளர்கள் அதில் சிக்கி அவதியுற்றதை கடுமையாக கருதுவதாகவும் குமரேசன் ஆறுமுகம் தெரிவித்தார்.