பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸக்கீருக்கு தடையில்லை

0

இவ்வார இறுதியில் மஸ்ஜித் சீனா மலாக்காவில் நடைபெறும் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஸக்கீர் நாயக்கிற்கு தடையேதும் இல்லை என உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறினார்.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸக்கீருக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படாது என நேற்று இங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அது ஒரு பிரார்த்தனைக் கூட்டம்தான். ஆனால் அந்தக் கூட்டத்தில் உரையாற்ற சர்ச்சைக் குரிய அந்த இஸ்லாமிய போதக ருக்கு அனுமதி இல்லை என்றார் அவர். மலேசியாவில் உள்ள இந்திய
மற்றும் சீன சமூகங்களை இழிவு படுத்திய ஸக்கீருக்கு எதிரான விசாரணை முடிவடைந்து விட்டது.
ஸக்கீருக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை
சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் தான் முடிவு செய்யும் என புக்கிட் அமான் குற்ற விசாரணைப் பிரிவு இலாகா இயக்குனர் ஹுஸிர் முகமட் கூறியிருந்தார்.
அமைதியைச் சீர்குலைக்கத் தூண்டும் செயலுக்காக பீனல் சட்டம் 504 ஆவது பிரிவின் கீழ் ஸக்கீருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை அந்த இஸ்லாமிய மதபோதகருக்கு எதிராக நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட
போலீஸ் புகார்கள் செய்யப்பட் டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 2 =