பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மாசி மாத ஏகாதசி விரதம்

பிரம்மஹஸ்தி தோஷம், மூதாதையர்கள் மோட்சம், மன உளைச்சல் ஏற்படும் விரக்தி போன்றவை மாசி மாத ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் நம்மை விட்டு நீங்கும். காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், தாய்க்கு சமமான தெய்வமும், ஏகாதசிக்கு சமமான விரதமும் இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப் பற்றி, சிவ பெருமானே பார்வதி தேவியிடம் எடுத்துக்கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும், 11 ஆம் நாள் வளர்பிறை ஏகாதசி என்றும், பெளர்ணமிக்குப் பிறகு வரும் 11 ஆம் நாள் தேய்பிறை ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட பலனும் உண்டு. மார்கழி மாத வளர்பிறை, வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகிறது. அன்றைய நாளிலிருந்து ஏகாதசி விரதம் கடைப்பிடித்து வந்தால் கிடைக்கும் பலன்கள், கணக்கில் அடங்காது

மாசி மாத வளர்பிறை ஏகாதசி “ஜயா” எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதையர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும். மாசி மாத தேய்பிறை ஏகாதசி “ஷட்திலா” எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும். மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் “ஷட்திலா” என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 17 =