பிரதாரை மாற்றும் அதிகாரம் தமைமைத்துவ மன்றத்திற்கு உண்டு!

0

தமது பிரதமர் பதவியை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் எப்போது ஒப்படைக்கப்படும் என்ற முடிவை செய்யும் அதிகாரம் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு இல்லை என பிகேஆர் மூத்த தலைவர் டாக்டர் சைட் ஹுசின் அலி கூறினார்.
அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்கும்படி மகாதீருக்கு உத்தரவிடும் அதிகாரம் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றத்திற்கே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த பொதுத் தேர்தல் வரை மகாதீர் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்புவோர்கள், மகாதீர் ஒரு சிறிய கட்சியை பிரதிநிதிப்பதால் அவரை எந்த நேரத்திலும் நீக்கும் அதிகாரம் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றத்துக்கு இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என சைட் ஹுசின் தெரிவித்தார்.
தமக்குப் பதிலாக பிரதமராக வருபவர் இன்னும் ஆற்றல்மிக்கவராக இல்லை என நியூயார்க்கில் மகாதீர் ஆற்றிய உரை, பக்காத்தான் ஹராப்பானிற்கு அவமானம் என அவர் சொன்னார்.
மகாதீர் ஓர் அரசியல் விளையாட்டை நடத்தி வருகிறார். கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பாக பக்காத்தான் ஹராப்பானின் அனைத்து பங்காளிக் கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மகாதீர் சீர்குலைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here