பிரதமர் வேட்பாளர் யார்? முடிவாகிவிட்டது

0

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பக்காத்தான் ஹராப்பான் முடிவு செய்து விட்டதாக அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இருப்பினும் இது குறித்து பக்காத்தானின் சகாக்களான வாரிசான், முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் அணியுடன் கலந்தாலோசிக்கவேண்டியுள்ள தாக அவர் சொன்னார்.அதே வேளையில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க ஏற்பட்டுள்ள தாமதத்திற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக நேற்று அவர் தமது முகநூல் நேரடி ஒளிபரப்பில் தெரிவித்தார். யார் பிரதமர் என்பது கூட்டணிக்கு மிக முக்கியமான விவகாரம் அல்ல. தூய்மையான அரசாங்கம் மற்றும் பொருளாதார மறுமலர்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் பக்காத்தான் கூட்டணிக்கு முக்கியமான விவகாரம் ஆகும் என்றார் அவர்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் முக்கிய நிறுவனங்களுக்குத் தலைமையேற்க தகுதியற்ற நபர்களை நியமித்து வருகின்றது.
மேலும் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு வருவதாக போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
மத்திய அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் மக்களின் நலனை பணயம் வைத்து அல்ல என அவர் சுட்டிக் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 7 =