பிரதமர் வேட்பாளராக ஷாபி: பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் விரைவில் முடிவு செய்ய வேண்டும்

பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளராக வாரிசான் தலைவர் ஷாபி அப்டாலின் பரிந்துரை குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் விரைவில் முடிவு செய்ய வேண்டும் என ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா தொடர்புக் குழு இயக்குநர் காலிட் சமாட் வலியுறுத்தினர்.
வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்பே பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம் கூடவேண்டும் என கூட்டறிக்கை ஒன்றில் அவர்கள் குறிப்பிட்டனர்.
பக்காத்தான் ஹராப்பானின் நிலையை வலிமைப்படுத்துவதோடு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் பாடுபட வேண்டும் என அவர்கள் கூறினர்.
முதன் முறையாக கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த ஒரு தலைவர் பிரதமர் வேட்பாளராக்க முன்மொழியப்பட்டுள்ளது வரலாற்றுப்பூர்வமான ஒன்று என ஜசெக கருதுகிறது.
மத்திய அரசாங்கத்தை பெரிக்காத்தான் நேஷனலிடம் இருந்து கைப்பற்றுவதில் மட்டுமே எதிர்க்கட்சிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஆகையால் இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என லிம் மற்றும் காலிட் சமாட் தெரிவித்தனர்.
பக்காத்தான் ஹராப்பான் பிளஸ் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றினால், சபா முதலமைச்சர் ஷாபி அப்டால் பிரதமர் வேட்பாளராகவும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் முதலாவது துணைப் பிரதமராகவும் முக்ரிஸ் மகாதீர் இரண்டாவது துணைப் பிரதமராகவும் துன் மகாதீர் பரிந்துரை செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =