பிரதமர் நரேந்திர மோடி இப்படி செய்தாரா?

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரேபியர்கள் அணியும் தலைப்பாகையுடன் (கெஃபியே) காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. சவுதி அரேபிய சுற்றுப் பயணத்தின் போது நரேந்திர மோடி கெஃபியே அணிந்திருப்பதாக வைரல் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
சவுதி இளவரசரை மகிழ்விக்கும் நோக்கில் பிரதமர் மோடி இந்த தலைப்பாகையை அணிந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், வைரல் புகைப்படம் போட்டோஷாப் மென்பொருளில் உருவாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உண்மை புகைப்படத்தில் பிரதமர் மோடி கெஃபியே அணியாமல் இருப்பது தெளிவாக தெரிகிறது.

வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

வைரல் பதிவுகளில் பிரதமர் மோடி இந்து மதத்தை பின்பற்றினாலும், இந்திய பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கில் முதலீடு ஈட்ட இதுபோன்ற ஆடையை அணிந்து இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. இவை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
இணையத்தில் ரிவர்ஸ் சர்ச் செய்ததில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இவற்றை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் பிரமதர் மோடி கெஃபியே அணியவில்லை என தெளிவாகிவிட்டது. 
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × two =