பிரதமரை ஆதரிக்கும் சத்தியப் பிரமாணம் வெறும் வதந்தியே

பிரதமருக்கு ஆதரவாகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுவது வெறும் வதந்தியென பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

சரவாக் ரிப்போர்ட் பத்திரிகை அது பற்றிக் குறிப்பிட்டது அரசியலில் குழப்பத்தை விளைவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். சரவாக் ரிப்போர்ட்டின் படி, அம்னோ, பாஸ், பெர்சத்து, அஸ்மின் அலிக்கு நெருக்கமான மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் கோலாலம்பூருக்கு வரும்படி நெருக்குதல் கொடுக்கப்பட்டு, சத்தியப் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றிக் குறிப்பிட்ட சைஃபுடின், அது பற்றி தமக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என்றும் அது உண்மையானால், பொதுத்தேர்தலுக்கும் முன்னர், அன்வாருக்கு பிரதமர் பதவியை மாற்றிக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட உடன்பாடு என்னாவது என அவர் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + nine =