பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஆதரிக்கக்கோரி தெங்கு ரஸாலியின் காதல் கடிதம்

  பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிரான தனது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி குவா மூசாங் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாஸி ஹம்சா அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் காதல் கடிதத்தை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
  தெங்கு ரஸாஸி ஹம்சாவின் இந்த காதல் கடிதம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஃபாமி மற்றும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கும் இவர் அனுப்பி வைத்துள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் டான்ஸ்ரீ முஹிடினுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர். இதில் தெங்கு ரஸாஸி ஹம்சாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு இன்னமும் சபாநாயகர் அனுமதி வழங்காததால் கடந்த 19ஆம் தேதி தெங்கு ரஸாலி ஹம்சா, சபாநாயகரை குறை கூறி கடிதம் அனுப்பியிருந்தார்.
  அக்கடிதத்தை அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமே நேற்று நாடாளுமன்றத்தில் வழங்கியுள்ளார்.
  பிரதமருக்கு எதிரான எனது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சபாநாயகர் டத்தோ அஸஹார், அதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி வழங்காமல் இருப்பது நாட்டு சட்டவிதி 43க்கு முரண்பாடாக உள்ளது என தெங்கு ரஸாலி ஹம்சா குறைகூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here