பிரதமரிடமிருந்து வெ. 4 கோடியை எல்டிபி கட்சி பெற்றதா?

சபா மாநிலத் தேர்தலில் போட்டியிட பிரதமரிடமிருந்து எல்டிபி கட்சி பணம் எதனையும் பெறவில்லை என்று அதன் தலைவர் சின் சு பின் தெரிவித்தார்.
சீனர்கள் பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிட்டு அவர்களின் வாக்குகளைச் சிதறடிக்க, பிரதமர் முஹிடினிடமிருந்து 4 கோடி ரிங்கிட்டை லிபரல் டெமோக்ரடிக் கட்சி பெற்றதாகக் கூறப்படும் செய்தி, வதந்தி என்றும் அது பொய்யான குற்றச்சாட்டு என்றும் அவர் தெரிவித்தார்.
அது சம்பந்தமாகப் போலீசிலும் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது தனிப்பட்ட குற்றச்சாட்டு. அதன் மூலம் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே சில தரப்பினர் முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்மாதிரியான குற்றச்சாட்டு சீனர்கள் சார்ந்த கட்சியின் மீதுதான் சுமத்தப்படுவதாகவும் ஆனால், கடாஸான், மலாய் பெரும்பான்மையான கட்சிகளின் மீது சுமத்தப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். லிக்காஸ், கெப்பாயாங், லுயாங் ஆகிய தொகுதிகளில் ஜசெகவின் வேட்பாளர்கள் வாரிசான் சின்னத்தில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்கள் முதலமைச்சர் ஷாபி அப்டாலின் கருத்துக்குச் செவி சாய்க்காமல், லிம் குவான் எங்கின் உத்தரவுக்கே கட்டுப்படுவதாகக் குறிப்பிட்டார். எனவே, அத்தொகுதிகளில் போட்டியிடும் எல்டிபி வேட்பாளர்களை வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டு மென்று சின் சு பின் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =