பிரதமராக முஹிடினுக்கு ஆதரவா? அம்னோ – பாஸ் மறுப்பு

0

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராவதற்கு ஆதரவு தர தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத் திட்டுள்ளதாக வெளியான தகவல்களை பாஸ் – அம்னோ கட்சிகள் மறுத்துள்ளன.

கடந்த திங்கள்கிழமை பக்காத்தான் ஹராப்பான் அரசாங் கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து புதிய தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் உறுதியாகவுள்ளதாக அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா மற்றும் பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹஸான் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அடுத்த பிரதமராக முஹிடினுக்கு ஆதரவு தரும் வகையில் இவ்விரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிர மாணத்தில் கையெழுத்திட்டுள் ளதாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் வெளியிட்டதாகக் கூறப்பட்ட அறிக்கை உண்மை இல்லை என இவர்கள் கூறினர்.

“எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். நாடாளு
மன்றம் கலைக்கப்பட வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து கட்சியின் தலைவர் அல்லது தலைமைச் செயலாளர் மட்டுமே அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட வேண்டும் என அனுவார் மூசா தெரிவித்தார். நாட்டின் தலைமைப் பொறுப் பிற்கு முஹிடினை ஆதரிக்க அம்னோ – பாஸ் எம்பிக்கள் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட் டுள்ளனர் என துவான் இப்ராஹிம் துவான் மான் கூறியதாக தி ஸ்டார் தினசரி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + thirteen =