பிரதமராக என்னால் ஆதரவைத் திரட்ட முடியும்!

பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு தம்மால் போதுமான ஆதரவைத் திரட்ட முடியும் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங்கிற்கு நினைவுறுத்தினார்.
அன்வாரால் போதுமான ஆதரவைத் திரட்ட இயலாவிட்டால், வாரிசான் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் பிரதமர் வேட்பாளர் ஆகலாம் என்ற லிம் குவான் எங்கின் பரிந்துரை குறித்து அவர் கருத்துரைத்தார்.
குவான் எங் தமது கருத்துகளை வெளியிடலாம். அது குறித்து நமக்குப் பிரச்சினை எதுவும் இல்லை என அவர் சொன்னார்.
“குவான் எங்கிற்கு எனது பதில் இதுதான். என்னால் முடியும்” என
போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இதனிடையே நட்புணர்வை பிளவுபடுத்துவதை விட்டு விட்டு சபா தேர்தலில் கவனம் செலுத்தும்படி அன்வாரின் புதல்வியும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற
உறுப்பினருமான நூருல் இஸா, ஜசெகவை கேட்டுக் கொண்டார்.
ஜசெக, அமானா, வாரிசான், முன்னாள் பிரதமர் மகாதீரின் அணியினருடன் நடத்திய சந்திப்பின் போது ஒரு
மாற்று பிரதமர் வேட்பாளராக ஷாபி அப்டாலை,
லிம் குவான் எங் முன்மொழிந்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 11 =